
நாடு எதிர்கொண்டுள்ள பலத்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுவடைந்துவருகின்றன.
கடந்த இரவு தொடக்கம் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டு இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், தென்னிலங்கையின் வீதிகளில் விளக்குகளுடன் திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தென்னிலங்கை உட்பட நாட்டின் பெருமளவான பல்கலைக்கழகங்களில் பயிலும் சிங்கள மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடுகள் காரணமாக தென்னிலங்கையில் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாட உணவுக்காக அல்லல் படுவதாக தெரியவந்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தென்னிலங்கையில் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புத்தரப்பினரும் பொலிஸாரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாக தெரிவிக்கின்றனர்.