
எழுபத்து நான்கு வருடங்களாக பாதுகாக்கப்பட்ட ஜனநாயகத்தைக் காப்பது அனைவரினதும் பொறுப்பு என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அரசாங்கத்தைக் கவிழுங்கள் நாட்டைக் கவிழ்க்காதீர்கள் என அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் ஊடகப் பொறுப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிரிஹானயில் ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளை மன்னிக்க முடியாது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன், மக்களின் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது.
அத்தோடு, சமூக வலைத்தளங்களை தடை செய்வது அரசியல் ரீதியில் தேவையற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களை தடை செய்யும் முடிவுக்கு தான் எதிரானவர் அல்ல.
ஆனால், இது நவீன தொழில்நுட்பம் தெரியாத ஒரு பிரிவினரால் எடுக்கப்பட்ட முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.