
அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ,பொருட்களின் பன் மடங்கு விலையேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.