
வாஷிங்டன், மார்ச் 04
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகர் சாக்ரமென்டோ. நேற்று அதிகாலை நேரத்தில் அங்கு உணவகங்கள் மற்றும் மதுபான கடைகள் நிரம்பியுள்ள பகுதியில் தானியங்கி துப்பாக்கிச்சூடுகள் நடந்தன.
இதன் காரணமாக, தெருக்களில் மக்கள் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர். சம்பவ பகுதிக்கு ஏராளமான ஆம்புலன்சுகள் விரைந்தன. இந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன இதன் பின்னணியோ, கூடுதல் தகவல்களோ வெளிவரவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த நகரின் 9-வது மற்றும் 13-வது வீதிகளுக்கு இடையேயான பகுதிகளை பொலிஸார் சுற்றிவளைத்து மூடினர். இந்தப் பகுதியை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.