
காலை நேர ரயில் சேவையின்மையால் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஊரடங்குச் சட்டம் காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு வருகை தர முடியாத நிலையால் காலை நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (4) காலை 6 மணிக்குப் பின்னர் அலுவலக ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் எனவும் ஊரடங்குச் சட்டம் காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு வருகை தர முடியாத பட்சத்தில் காலை நேரத்துக்கான பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.