
கொழும்பு, ஏப் 04
மக்களின் குரலை பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் உட்பட 50 இற்கும் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (05) பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் 113 பெரும்பான்மையை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்
நீர்கொழும்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதனால் நாளைய தினம் அரசாங்கம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.