பேராசிரியர் சோ. சந்திரசேகரன் காலமானார்!

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தனது 77ஆவது வயதில் இன்று (04) காலமானார்.

இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவர் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காகவும் சமூக நலன்சார் விடயங்களுக்காகவும் பல்வேறு தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *