
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள கொவிட் தடுப்பூசிகள் ஜூலை மாதம் அளவில் காலாவதியாகும் அபாயம் நிலவுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே காலாவதியாவதற்கு முன்னதாக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உடன் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொத்த சனத்தொகையில் 55 வீதமானவர்களே தற்போது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.