கொழும்பு, ஏப் 04
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் விலகியுள்ளார். அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து தானும் இராஜினாமா செய்துள்ளார்.
தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் செய்தியொன்றை பதிவிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், தான் ஏற்கனவே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
