பரபரப்பாகும் அரசியல் களம் இலங்கையின் பரபரப்பான சூழ்நிலையில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் சற்று நேரத்துக்கு முன்னர் இராஜினாமா செய்ததாக அறிவித்திருக்கிறார். தனது டுவிட்டர் பதிவு மூலம் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்தியிருக்கிறார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
