
கொழும்பு, ஏப் 04
புதிய அமைச்சரவைக்கு எதிரான கோஷங்களும் வலுப்பெற்றுள்ளன. சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். எனினும், “பழைய வைனை புதிய போத்தலில்” ஊற்றியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்கான பிரச்சினையை தீர்த்து, பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும். அதற்காகதான் இடைக்கால அரசாங்கத்தை நிறுவுமாறு கோரினோம். பொதுத்தேர்தலில் தலைவரை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.