இலங்கை அரசுக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் பல்கலைக் கழக முன்றலில் பேரணியாக ஆரம்பித்து , பருத்தித்துறை வீதி ஊடாக யாழ் நகரை சென்றடைந்து, பின்னர் ஸ்ரான்லி வீதி ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது.
போராட்ட பேரணி பயணித்த வீதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அலுவலகம் அமைந்துள்ளது.
குறித்த அலுவலகத்தை பேரணி கடக்க முற்பட்ட வேளை ,கட்சி அலுவலகம் முன்பாக பாரிய எதிர்ப்புக் கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் கட்சி அலுவலக மேல் மாடியில் சிலர் எட்டிப் பார்க்கும் காணொளி, புகைப்படங்கள் தற்போது பகிரபட்டு வருகின்றன.
இவ்வாறு போராட்டக்காரர்களை மாடியிலிருந்து மறைந்திருந்து எட்டிப் பார்த்தது அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான குழுவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

