<!–
நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இன்று ( திங்கட்கிழமை ) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 300ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது .
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.