
கொழும்பு, ஏப் 04
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், இ.தொ. காவின் இந்த திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணமென பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், இ.தொ.கா ஜனாதிபதியை சந்தித்தமைக்கான காரணங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.