நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தற்போது மட்டக்களப்பின் கல்லடிப் பாலத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்ப்பாட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்கள் இளைஞர்கள் யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
