
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட தேரர்கள் சிலர் போராட்டகாரர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து அவரை விரட்டியுள்ளனர். அத்துடன் இதன்போது அவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
இதன்போது பொதுமக்கள் கூறுகையில்,
உங்களை போன்றவர்கள் காரணமாகவே நாங்கள் இன்று துன்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றோம், தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள், வணங்கி கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் இந்த இடத்தை விட்டு செல்லுங்கள்.- எனத் தெரிவித்துள்ளனர்.