செவ்வாய்க்கிழமை 6 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு

கொழும்பு, ஏப் 4

செவ்வாய்க்கிழமை மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, செவ்வாய்க்கிழமை 6 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ABCDEFGHIJKL ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

PQRSTUVW ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும் வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் இந்த நடைமுறையிலேயே மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *