
கொழும்பு, ஏப் 4
இலங்கை இராணுவம் எப்பொழுதும் அரசமைப்பை பின்பற்றும் என இராணுத்வதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை படையினர் எப்போதும் அரசமைப்பை பின்பற்றுவார்கள் இராணுவத்தினர் அதற்கு விதிவிலக்கல்ல, இலங்கை இராணுவம் ஒரு தொழிற்சார் அமைப்பு அது நாட்டிற்கு பாதுகாப்பை வழங்க தயாராகவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.