நாட்டில் தொடரும் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து எரிபொருளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சுன்னாகப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று
காலை முதல் மாலை 6.15 மணி வரை வாகன சாரதிகள் காத்து நிற்கின்றனர். தற்போது வரை எரிபொருள் வழங்கப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பில் வாகான சாரதிகள் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:
நாம் இன்று காலை 11 மணியிலிருந்து காத்து நிற்கின்றோம். முதல் 100 பேருக்கு எரிபொருள் வழங்குவதற்கான டோக்கன் தரப்பட்டுள்ளது.
இப்போது மாலை 6 மணி ஆகின்றது. இன்னமும் டீசல் தரவில்லை. இவர்களிடம் டீசல் உள்ளது. எமக்கு டீசலை தராமல், இரவு நேரத்தில் இங்கு வருகை தரும் சொகுசு வாகனங்களுக்கு டீசலை அதிக விலைக்கு வழங்குவார்கள்.- என்றனர்.
