யாழ்ப்பாணம், ஏப் 4
நாட்டில் தொடரும் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரங்கள் காத்திருந்து எரிபொருளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சுன்னாகம், தாவடிப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசைகளில் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
மேலும், சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் மாலை 6.15 மணி வரை வாகன சாரதிகள் வரிசையில் நின்றாலும் தற்போது வரை எரிபொருள் வழங்கப்படவில்லை என சாரதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


