
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்க அமைச்சரவையை பணிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றில் 2 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்கள் காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், திறைசேரி செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 42 பேர் அதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.