இலங்கையை காக்க உதவுமாறு மோடிக்கு அவசர கோரிக்கை

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பில் சிக்கியுள்ள இலங்கையை காக்க இந்தியாவால் முடியும் என்பதால், உடனடியாக உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரமான ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நெருக்கடிகளும் அரசியல் குழப்பங்களும் அதிகரித்துவரும் நிலையில், சஜித் பிரேமதாச இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அதிகபட்சமாக உதவுமாறு வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

முடிந்தவரை இலங்கைக்கு உதவிசெய்து அதனை மீட்டெடுக்க இந்தியா முன்வரவேண்டும் எனக்கோரியுள்ள அவர், மக்களின் உயிர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக இந்தியா இதனை செய்யவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கை அமைச்சரவையின் பதவி விலகல் நாட்டு மக்களை முட்டாளாக்கும் நாடகம் எனவும் இந்தியப் பிரதமருக்கான கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் உண்மையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காத நிலையில், இந்தியா உதவவேண்டும் என மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *