
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக முன்னணி ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
அவர் விசேட அறிக்கை ஒன்றில்,
இந்த நாட்டின் குடிமக்களிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக நான் ஏமாற்றப்பட்டேன்.
ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கையின் பேரில் தானும் பலருடன் இணைந்து அவருக்கு ஆதரவளித்ததாக திஸ்ஸ ஜனநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னோக்கிச் செல்லும்போது எந்தவொரு தனிநபருக்கும் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை.
நடுநிலைமையுடன் இருப்பேன் என்றும் ஜனாநாயக்க மேலும் கூறினார்.