
திக்வெல்ல – ஹிரிகட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
உந்துருளியில் வருகைதந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.