தமிழ் மக்களை கொன்ற கோட்டா அரசு இன்று சிங்களவர்களையும் கொல்வதற்கு துடிக்கின்றனர்! – சிங்கள சகோதரி ஆதங்கம்

தமிழ் மக்களை அன்று போரில் கொன்று குவித்தவர்கள், இன்று நாட்டு மக்களையும் கொல்வதற்கு துடிகின்றனர் என, சிங்கள மொழி பேசும் சகோதரி ஒருவர், காணொளி ஒன்றின் மூலமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் 2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நடைபெற்றது.அரசியல்வாதிகளே ஏப்ரல் மாத குண்டு வெடிப்பின் போது முஸ்லிம் இனத்தவர்களோடு பிரிவினையை ஏற்படுத்தினர்.

எந்த நாளும் இன பேதத்தை உருவாக்கியது இவ் அரசியல்வாதிகள். அன்று யுத்தத்தின் போது தமிழ் இனத்தவர்கள் தந்தை, தாய் கண் முன்னே இறந்தனர்.

இன்று அதே நிலை நமக்கும் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு காலம் ஏமாற்றியது போதும். நம்மிடையே கொள்ளையடித்த அனைத்து சொத்துகளையும் மீள தாருங்கள்.

இன்று சிங்களவராக தமிழராக நாம் வீதியிற்கு இறங்கவில்லை. இலங்கையர் என்ற ரீதியில் இந் நாட்டிற்காக போராடுகிறோம்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *