
போக்குவரத்துத் துறை மற்றும் மின்சார விநியோக செயற்பாடுகளுக்குத் தேவையான 10 இலட்சம் லீற்றர் டீசலை ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு ரயில்கள் மூலம் அவற்றை போக்குவரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போக்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஐ.ஓ.சி நிறுவனத்தின் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு எரிபொருள் கொண்டுவரப்படும் நிலையில் அதற்கு மேலதிகமாகவே மேற்படி 10 இலட்சம் லீற்றர் டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் எரிபொருள் கப்பலொன்று நேற்றும் நாட்டை வந்தடைந்ததாகவும் அந்தக் கப்பலில் 20,000 மெற்றிக் தொன் எரிபொருள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.