கொழும்பு, ஏப் 05
கோட்டாபாய அரசுக்கு எதிராக மக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சனத் ஜெயசூர்யா, இலங்கை டெஸ்ட் அணி தலைவர் திமுத் கருணாரட்ன பங்கேற்றுள்ளனர். இதனிடையே கோட்டபாய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ‘GotaGoHome’ என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.
இந்த நிலையில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
