
நாட்டில் தொடரும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகள் காரணமாக பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பேக்கரி தொழிலும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக
பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உற்பத்தி பொருட்கள் மற்றும் ஏனைய காரணங்களால் ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.