
நியூயார்க், ஏப் 05
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் உள்ளது. 1977-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் பழமையான இந்து கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.
குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பிளஷிங்கில் அமைந்துள்ள இந்த கோவில் அமைந்திருக்கும் தெருவுக்கு போவின் தெரு என பெயரிடப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்துக்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான ஜான் போவின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
தற்போது இந்த தெருவின் அடையாளமாக இந்த விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. எனவே இந்த தெருவுக்கு ‘விநாயகர் கோவில் தெரு’ என இணை பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கடந்த 2-ந் திகதி நடந்த இந்த பெயர் சூட்டு நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால், நியூயார்க் மேயர் அலுவலக அதிகாரி எரிக் ஆடம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.