
தங்காலை, ஏப் 05
பிரதமர் மகிந்தவின் தங்காலை – கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் அதிகளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்காலை நகரில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர்.
இதன்போது பொலிஸார் கண்ணீர் புகைத்தாக்குதல்களை மேற்கொண்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் கார்ல்டன் இல்லத்திற்குள் நுழைய முயற்சித்தமையின் போது, பொலிஸார் 12 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.