பதவியை இராஜினாமா செய்த அன்றே டுபாய்க்கு பறந்த நாமல்?

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ஷ, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ஆம் திகதி மாலைத்தீவுக்குச் சென்றதாகவும்  அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியை பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பல அமைச்சரவை அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.

அதற்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்தார்.

இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுக்கு இது உதவும் என்று நம்புகிறேன் என்றும் அவர் ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, பதவியை இராஜினாமா செய்த அன்றே அவர் டுபாய்க்குச் செய்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *