
தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற அமர்வுகளில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் விளக்கமளித்து வருகின்றார்.
எதிர்கட்சித் தலைவர் மேலும் உரையில்,
நாட்டு மக்கள் விழித்து விட்டனர்.இனி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.இப்போதும் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்றால் அதிசயம் தான்.வெளியே என்ன நடக்கிறது என்று இன்னுமும் உங்களுக்கு புரியவில்லையா.பொறுத்திருங்கள் எல்லாம் சரியாகும்.எல்லாம் முடியும் எல்லாம் முடியும் என்று சொன்னீர்களே இப்போது வாயை திறந்து ஏதும் கூறுங்கள் மக்கள் ஆர்வமாக உள்ளனர் மேலும் இந் நிலையில் ஊரடங்குச்சட்டம் மற்றும் சமூகவலைத்தளங்கள் முடக்கம் குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதேவேளை சஜித் பிரேமதாசவின் உரையின் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூச்சல் இட்டுவருவதுடன் தொடர்ந்தும் அவர் உரையாற்றி வருகின்றார.