யாழில் 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்- அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர், சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்து 255ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,  11 ஆயிரத்து 877 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்தவகையில் தற்போது 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஒன்றுகூடல்கள், தேவையற்ற பயணங்கள் ஆகியவற்றை தவிர்க்கும்படி,  மீண்டும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *