கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, மத்திய மலைநாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு நீரை வழங்கும் கங்கைகள், ஓடைகளில், இருந்து வரும் கழிவு பொருட்கள் மூலம் நீர்த்தேக்கங்களின் அதிகளவு பிளாஸ்டிக் பொருள்கள், மற்றும் கழிவுப் பொருள்கள், உட்க்கா பொருட்கள், அதன் கரையோரப் பகுதிகளில் அதிக அளவு வந்து குவிந்துள்ளது .
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீரை வழங்கும் மறே ஓயா,காட்மோர் ஓயா, நல்ல தண்ணீர் ஓயா, சாமிமலை ஓயா,மற்றும் சிற்றாறுகள் மவுசாகல நீர் தேக்கத்தில் சங்கமிக்கும் பகுதியில் இவ்வாறான கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதுகுறித்து நீர்மின் நிலைய உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கையில். நீர் ஓடைகளிலும், நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் ஆறுகளிலும், கழிவுகளை போட வேண்டாம் எனவும். இதனால் நீர்த்தேக்கத்தில் வாழும் மீன் மற்றும் ஏனைய உயிரினங்களை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இவ்வாறான கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், அதனை எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.
நீர்தேக்கத்திற்கு வந்து உள்ள குப்பைகளை அகற்ற . கடற்படையினர், இலங்கை மின்சார சபையின் பாதுகாப்பு பிரிவினர்,மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர், மற்றும் அதிரடிப்படையினர், மஸ்கெலியா பொலிஸார்,மீன்பிடிதுறையினர் இணைந்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட உள்ளனர்.