
நாடு மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இங்கு உரையாற்றிய அனைவரும் தம்மையும் தமது பதவியையும் காப்பாற்றும் நோக்கிலேயே உரையாற்றினார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கவில்லை.
மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களிடையே அமைதியை நாம் உருவாக்க வேண்டும்.
நாங்கள் அனைவரும் பதவி விலகி விட்டோம். புதிய அமைச்சரவை அமைக்கப்படும்.
நாம் ஜனநாயக ரீதியில் தான் நாம் அரசை பொறுப்பேற்றோம்.
இதை மாத்தினால் ரத்த ஆறு தான் மிஞ்சும். நாம் ஒன்று சேர்ந்து தான் செயற்பட வேண்டும்.
நாட்டின் ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டும்.அதற்கு அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் என்றார்.