
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.இதில் இலங்கை அரசாங்கம் தப்பிப்பிழைக்குமா? என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார பிரச்சனையான பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் கடுமையான விலைகள் அதிகரிப்பு நிலைமையினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்ட்ங்கள் நடத்துகின்றார்கள்.
இதனைத்தொடர்ந்து நாட்டின் அமைச்சரவையிலே உள்ள அமைச்சர்கள் பிரதமரை தவிர ஏனையோர் தங்களது இராஜினாமா கடிதங்களை கொடுக்கப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதற்கமைய புதிதாக நான்கு அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நியமனம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது .
மேலும்இ ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ இருக்கும் சூழ்நிலையிலேயே ஜனாதிபதி விடுத்த அழைப்பினை எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல கட்சிகள் நிராகரித்துள்ளன.
இந்த நிலைமையில் வடக்குஇகிழக்கு மாகாணகளின் தமிழ் மக்களின் எழுச்சி தெற்கு மாகாணத்தில் இருப்பது போன்று இல்லை. இந்த பொருளாதார பிரச்சனைகளை தங்க்கிக்கொள்ள முடியாமல் ஆர்ப்பாட்ட்ங்களில் ஈடுபடுகின்றனர். இதில் இலங்கை அரசாங்கம் தப்பிப்பிழைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது என தெரிவித்தார்.