
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் தலைமையில் ஒன்றுகூடியது.
இந் நிலையில் அமர்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,
மக்களுக்கு கோட்டா அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.நாட்டு மக்களின் போராட்டம் எழுச்சியடைந்துள்ளது.கடந்த 30 வருடமாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் முழுமையாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஆகவே இவர்கள் அனைவரும் வெளியே செல்லக் கூடாது.அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றார்.