
மத்திய வங்கியின் ஆளுநராக அஜிட் நிவாட் கப்ரால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (14) வழங்கிவைக்கப்பட்டது.
அவர், தனது கடமைகளை நாளை(15) பொறுப்பேற்றுக்கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.