
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆகையால், அடுத்த வாரம் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி பரிசீலனை செய்த பிறகு இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சிறு வணிகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே டாக்டர் ரமேஷ் பத்திரண இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்த மாத இறுதிக்குள் நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.