யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில், குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தது.
இந்த நிலையில், இச் செயற்பாட்டை யாழ் மாநகரசபை உடனடியாக இடை நிறுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டு சென்ற நிலையில் இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.