மனித உரிமைகள் மோசம் ஆனாலும் கோத்தா அரசு மீது நம்பிக்கை! பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஐ.நா!

இலங்பிகையில் மனித உரிமைகள் மோசம்
ஆனாலும் கோத்தா அரசு மீது நம்பிக்கை!

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தமிழர்களின் பிரச்சினைகள் பொதுவான மனித உரிமை மீறலுக்குள் மடைமாற்றம் காட்டமான அறிக்கையை எதிர்பார்த்த தமிழர்களுக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.

“இலங்­கை­யில் மனித உரிமை மீறல்­கள் மேலும் மோச­ம­டைந்­துள்­ளன. மனித உரி­மை­கள் பாது­காப்பு விட­யத்­தில் இன்­ன­மும் ஆக்­க­பூர்­வ­மாக எது­வும் நடக்­க­வில்லை. குறிப்­பாக, அவ­ச­ர­கால விதி­மு­றை­க­ளால் சிவில் நிர்­வா­கத்­தின் மீது இரா­ணு­வத்­தின் செல்­வாக்கு மேலும் அதி­க­ரிக்­கப்­ப­டு­வதை நிறுத்த வேண்­டும்.

ஆயி­னும் இலங்கை அர­சாங்­கம் செயற்படுத்தும் நல்­லிக்­க­ணத்­தைக் ஏற்­ப­டுத்­தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தில் காட்­டும் உறுதி, காணா­மல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கங்­களை புதி­தா­கத் திறத்­தல்,சிவில் அமைப்­பு­க­ளு­ட­னான ஜனா­தி­ப­தி­யின் சந்­திப்­பு­கள் போன்ற விட­யங்­களை வர­வேற்­கி­றோம். தொடர்ந்­தும் அர­சாங்­கம் இலங்­கை­யில் நல்­லி­ணக்­கம், பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தில் நம்­ப­க­மான முன்­னேற்­றத்­தைத் தொட­ர­வேண்­டும்” என்று தெரி­வித்­துள்­ளார் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ளர் மிச்­செல் பச்­¼Äலெட் அம்­மை­யார்.

இந்த அறிக்­கை­யில் நாட்­டில் இன­பே­த­மின்றி நிக­ழும் மனித உரி­மை­களை முன்­னி­றுத்தி, தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளை­ அதற்­குள் மடை­மாற்­றம் செய்­யும் வகை­யி­லும், ராஜ­பக்ச அர­சாங்­கத்­தின் மீது நம்­பிக்கை வைப்­பது போன்­றும் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ளர் மிச்­செல் பச்­ச­லெட் அம்­மை­யார் ஜெனி­வா­வில் நேற்று ஆரம்­பித்த ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 48 ஆவது கூட்­டத் தொட­ரில் வெளி­யிட்ட கருத்­துக்­க­ளால் தமி­ழர் தரப்பு பெரும் அதி­ருப்தி அடைந்­துள்­ளது.
நேற்­றைய அமர்­வின் போது ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ளர் மிச்­செல் பச்­லெட் அம்­மையார், இலங்கை தொடர்­பில் குறிப்­பிட்ட முக்­கிய விட­யங்­க­ளின் சாராம்­சம் வரு­மாறு:-

🎯மனித உரிமை மீறல்
“கொரோ­னாத் தொற்­றுத் தாக்­கம், இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தல், பொறுப்­புக்­கூ­றலை நிலை­நாட்­டத் தவ­றி­யமை ஆகி­யவை நாட்­டில் அடிப்­படை மனித உரி­மை­கள், சிவில் நட­வ­டிக்­கை­க­ளுக்­கான சமூக கட்­ட­மைப்­பு­க­ளுக்­கு­ரிய இடை­வெளி, ஜன­நா­யக நிறு­வ­னங்­கள் மற்­றும் பேண்­தகு அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்­றில் பெரும் தாக்­கத்­தைச் செலுத்­து­வ­தா­கத் தெரி­கின்­றது.

இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­த­லும் கோத்­தா­பய மீது நம்­பிக்­கை­யும்
நாட்­டில் உண­வுப் பாது­காப்பு மற்­றும் விலைக் கட்­டுப்­பாடு ஆகி­ய­வற்­றின் பெய­ரில் கடந்த 30ஆம் திகதி அவ­ச­ர­கால நிலைமை கொண்­டு­வ­ரப்­பட்டு இருக்­கின்­றது. இது சிவில் செயற்­பாட்­டில் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தல் செயற்­பாட்­டை­யும் தலை­யீட்­டை­யும் மேலும் அதி­க­ரிக்­கச் செய்­யும் என்று கரு­து­கின்­றோம். அத­னால் இந்த நிலை­மையை உன்­னிப்­பா­கப் கவ­னிக்­கி­றோம்.சில சிவில் சமூ­கத் தலை­வர்­க­ளு­டன் ஜனா­தி­பதி சமீ­பத்­தில் நடத்­திய சந்­திப்பை நாங்­கள் ஆர்­வத்­து­ட­னும் நம்­பிக்­கை­யு­ட­னும் நோக்­கு­கின்­றோம்.

🎯ஊட­க­வி­ய­லா­ளர்­கள்,
நீதித்­துறை மீதான துன்­பு­றுத்­தல்
துர­திஷ்­ட­வ­ச­மாக மனித உரி­மை­கள் பாது­கா­வ­லர்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் மற்­றும் காணா­மல்­போ­ன­வர்­க­ளின் குடும்­பங்­கள் மீதான கண்­கா­ணிப்பு, அச்­சு­றுத்­தல் மற்­றும் நீதித்­து­றைத் துன்­பு­றுத்­தல் ஆகி­யவை தொடர்­கின்­றன.

🎯துன்­பு­றுத்­தல்
அரச கொள்­கை­களை விமர்­சிக்­கும் மாண­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள், மருத்­து­வர்­கள் மற்­றும் மதத் தலை­வர்­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வது மோச­மான அள­வுக்கு விரி­வ­டைந்­துள்­ளது.

🎯நினை­வேந்­தல், போரா­டத் தடை
பல அமை­தி­யான போராட்­டங்­கள் மற்­றும் நினை­வு­கூ­ரல்­கள் அதி­கப்­ப­டி­யான பலம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுத் தடுக்­கப்­பட்­டுள்­ளன.
ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கைது செய்­தல், அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­க­ளில் முடக்­கு­தல் போன்­றவை தொடர்­கின்­றன.
சிவில் சமூக குழுக்­கள் மீதான புதிய விதி­மு­றை­கள் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. அடிப்­படைச் சுதந்­தி­ரங்­கள் மீதான கட்­டுப்­பா­டு­களை அவை மேலும் கடு­மை­யாக்­கும் எனப் பர­வ­லாக அஞ்­சப்­ப­டு­கின்­றது.

🎯நீதித்­துறை மீது தலை­யீடு
அடிப்­படை மனித உரிமை வழக்­கு­கள் பல­வற்­றின் நீதித்­துறை செயற்­பாட்­டின் மீது செய்­யப்­பட்ட தலை­யீ­டு­கள் குறித்து நான் கவ­லைப்­ப­டு­கி­றேன்.
2008, 2009 ஆம் ஆண்­டு­க­ளில் 11 பேர் கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட வழக்­கில் முன்­னாள் கடற்­ப­டைத் தள­பதி வசந்த கரன்­னா­கொ­ட­வுக்கு எதி­ராக வழக்­குத் தொடர முடி­யாது என்ற சட்­டமா அதி­ப­ரின் முடி­வும் இதில் அடங்­கும்.
2011 ஆம் ஆண்­டில் அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரைக் கொன்ற குற்­றத்­துக்­காக மர­ண­தண்­டனை பெற்ற முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துமிந்த சில்­வா­வுக்கு ஜனா­தி­பதி சமீ­பத்­தில் வழங்­கிய பொது­மன்­னிப்பு, நாட்­டில் சட்­டத்­தின் ஆட்சி மற்­றும் நீதிச்­செ­யல்­முறை மீதான நம்­பிக்­கை­யைச் சிதைக்­கும் அபா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பொலிஸ் காவ­லில் இடம்­பெ­றும் கொலை­கள் மற்­றும் போதைப்­பொ­ருள் குற்­றக் குழுக்­க­ளு­டன் பொலி­ஸார் நடத்­தும் ‘என்­க­வுண்­டர்­கள்’ மற்­றும் சட்ட நடை­மு­றைப்­ப­டுத்­தும் அதி­கா­ரி­க­ளின் தொடர்ச்­சி­யான சித்­தி­ர­வ­தை­கள் மற்­றும் மோச­மான நடத்­தை­கள் குறித்து நாங்­கள் பெரி­தும் கவ­லைப்­ப­டு­கின்­றோம்.
தனி­ந­பர்­களை இரண்டு ஆண்­டு­கள் வரை விசா­ர­ணை­யின்றி தன்­னிச்­சை­யாக நிர்­வா­கக் காவ­லில் வைப்­ப­தற்கு வழி­செய்­யும் தீவி­ரப் போக்கு விதி­மு­றை­கள் கடந்த மார்ச் மாதத்­தில் கொண்­டு­வ­ரப்­பட்­டமை கவ­லை­யைத் தரு­கின்­றது. எனி­னும், இந்த விதி­மு­றை­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றம் தடை­யுத்­த­ரவு விதித்­தி­ருப்­பதை அவ­தா­னித்து இருக்­கின்­றோம்.

🎯அர­சின் ஆலோ­ச­னைச்சபைக்கு
வர­வேற்பு
பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் குற்­ற­வா­ளி­க­ளாக கரு­தப்­பட்டு தண்­டனை அனு­ப­வித்து வந்த 16 கைதி­கள் தண்­டனை முடி­யும் தறு­வா­யில் மன்­னிக்­கப்­பட்­ட­னர். இந்­தப் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளோர் தங்­கள் மீதான வழக்­கு­கள் குறித்து மறு ஆய்வு செய்­வ­தற்கு விண்­ணப்­பிக்­கக் கூடிய ஓர் ஆலோ­ச­னைச் சபை நிறு­வப்­பட்­டுள்­ளது. மேலும், இந்த நீண்­ட­கால வழக்­கு­க­ளுக்கு விரை­வான தீர்­வைக் காண வேண்­டும் என நான் வலி­யு­றுத்­து­கி­றேன்.

🎯மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தில் அரசு உறுதி
பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தற்­கான தனது நோக்­கத்தை அரசு மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்­காக அமைச்­ச­ர­வைத் துணைக் குழு ஒன்­றை­யும் அது அமைத்­துள்­ளது. ஆயி­னும், தொடர்ந்து மக்­க­ளைக் கைது­செய்­ய­வும் தடுத்­து­வைக்­க­வும் இந்­தச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்­து­வது குறித்து நான் மிக­வும் கவ­லைப்­ப­டு­கின்­றேன்.
சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ் இந்­தச்­சட்­டத்­தின் கீழ் நீதி­மன்­றத்­தின் முன் நம்­ப­க­மான ஆதா­ரங்­கள் முன்­வைக்­கப்­ப­டாத நிலை­யில் 16 மாதங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார். அதே­போல் ஆசி­ரி­ய­ரும் கவி­ஞ­ரு­மான அஹ்­னாவ் ஜஸீம் 2020 மே முதல் குற்­றச்­சாட்டு ஏது­மின்­றித் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உட­ன­டித் தடையை நான் வலி­யு­றுத்­து­கின்­றேன்.

🎯ஓ.எம்.பி அலு­வ­ல­கம் திறப்பு
’சிறப்­பான சம்­ப­வம்!’
இழப்­பீ­டு­க­ளுக்­கான தேசி­யக் கொள்கை கடந்த ஓகஸ்­டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. அதே­நே­ரம் இழப்­பீட்­டுக் கொடுப்­ப­ன­வு­கள் மற்­றும் நல்­லி­ணக்­கத் திட்­டங்­கள் தொடர்ந்­தன. காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கம் ( ஓ.எம்.பி) தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்­றது. கிளி­நொச்­சி­யில் ஆறா­வது பிராந்­திய அலு­வ­ல­கம் திறக்­கப்­பட்­டுள்­ளது. அது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டையே நம்­பிக்­கையை ஊக்­கு­விக்க வேண்­டும்.
வெளிப்­ப­டை­யாக – பாதிக்­கப்­பட்­டோரை மையப்­ப­டுத்­திய பாலின உணர்­தி­றன் அணு­கு­மு­றை­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை நான் மீண்­டும் வலி­யு­றுத்­து­கின்­றேன்.

🎯தக­வல் மற்­றும் ஆதாரக் களஞ்­சி­யம்
அதே­வேளை, இழப்­பீட்­டுத் திட்­டங்­கள் விசா­ல­மான உண்மை மற்­றும் நீதி நட­வ­டிக்­கை­யு­டன் அமைந்­தி­ருக்­க­வேண்­டும். இந்­தப் பின்­ன­ணி­யில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 46/01 இலக்க தீர்­மா­னத்­தின் பொறுப்­புக்­கூ­றல் தொடர்­பான அம்­சங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான எனது அலு­வ­ல­கத்­தின் பணி தொடங்கி உள்­ளது. ஓர் ஆரம்­பக் குழு­வின் ஆட்சேர்ப்பு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஏற்­க­னவே தரப்­பட்ட ஒரு லட்­சத்து 20 ஆயி­ரம் தனித்­தனி ஆவ­ணங்­க­ளு­டன் ஒரு தக­வல் மற்­றும் ஆதாரக் களஞ்­சி­யத்தை நாங்­கள் உரு­வாக்கி உள்­ளோம்.
இந்த ஆண்டு, முடிந்த வரை தக­வல் சேக­ரிப்­பைத் தொடங்­கு­வோம். இதற்­குத் தேவை­யான நிதி உத­வி­களை உறுதி செய்­யு­மாறு உறுப்பு நாடு­களை நான் கேட்­டுக்­கொள்­கின்­றேன். அதன் மூலம் எனது அலு­வ­ல­கம் இந்த வேலையை முழு­மை­யா­கச் செயற்­ப­டுத்த முடி­யும்.

🎯முன்­னேற இட­முண்டு
இலங்­கை­யில் நல்­லி­ணக்­கம், பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தில் நம்­ப­க­மான முன்­னேற்­றத்­தைப் பெற வேண்­டும் என நான் நினைக்­கின்­றேன். அதற்கு உத­வும் வகை­யில் இலங்­கை­யின் முன்­னேற்­றங்­கள் தொடர்­பில் தொடர்ந்து கவ­னம் செலுத்­த­வும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் உறுப்­பி­னர்­களை நான் வேண்­டு­கி­றேன்” – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *