
மஸ்கெலியா – சாமிமலை ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான ஓல்ட்டன் தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது, நேற்று மாலை 4 மணிக்கு மின்னல் தாக்கியதில் நான்கு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் 27 வயது முதல் 35 வயதுடையவர்களாவர் என மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி எச். பண்டார கருத்து தெரிவிக்கையில்,
தற்போது மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் கனத்த மழையுடன் இடி மின்னல் நிலவுவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களை இடி மின்னல் மழை பெய்யும் பட்சத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பணித்துள்ளார்.