
கொழும்பு, ஏப் 06
பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குமாறு கோரி இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று நண்பகல் அந்தந்த அலுவலகங்களுக்கு முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இ.மி.ச ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் இயலாமையை இ.மி.ச ஊழியர்கள் மீது திணிக்கும் முயற்சிகளை கண்டித்துள்ளார்.