எல்லை கடந்து எழுதுவதற்கு இணைய தொடர்கள் உதவியாக உள்ளன – வெற்றிமாறன் 

<!–

எல்லை கடந்து எழுதுவதற்கு இணைய தொடர்கள் உதவியாக உள்ளன – வெற்றிமாறன்  – Athavan News

ஓடிடி வருகை எழுத்தாளர்களுக்கு  Golden Era காலமாக உள்ளது என தேசிய விருது வென்ற இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

நிலமெல்லாம் ரத்தம் தொடரை அறிமுகம் செய்து வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”இணைய தொடர்கள் திரைக்கதை எழுதுபவர்களுக்கு திரைப்படங்களை காட்டிலும் ஏற்றதாக உள்ளது. திரைப்படங்களுக்கு அதிகபட்சம் 200 பக்கங்கள் தான் கதை எழுத முடியும்.

ஆனால் இணையத் தொடர்களுக்கு நிறைய எழுதலாம். படங்களை பொருத்தவரை திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்தே எடுத்து வருகிறோம். அந்த Limitationகளை கடந்து பேசுவதற்கு இணைய தொடர்கள் உதவியாக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *