
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என இன்றைய நாடளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அதை தீர்ப்பதற்கு நாம் எல்லோரும் கட்சி பேதம் மறந்து செயற்பட வேண்டும்.
நேற்று சர்வ கட்சி கூட்டம் இடம்பெற்றது.அதிலும் இந்த விடயத்தையே ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாம் தோற்றுவிடுவோம் என்றால் அது பாரளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும்.
இதனால் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும்.
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் தொடர்பில் உடனடியாக நாம் ஆராய வேண்டி உள்ளது.
அது தொடர்பில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்- என்றார்.