தமிழர் தாயகத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்! சிவாஜி திட்டவட்டம்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வட்டிதுறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் கோரிக்கையின்படி காபந்து அரசாங்கத்தை பிரதான எதிர்க் கட்சிகள் உட்பட பல கட்சிகள் நிராகரித்துள்ளன.

இந்தச் சூழலின் பின்னணியில் தான் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு உறுதியான இறுக்கமான தீர்மானத்திற்கு வர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதுதான் எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் இவற்றை சாதகமாக பரிசீலிக்க வேண்டும்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *