ஒரேயொரு T20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி !

பாகிஸ்தான் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில், அவுஸ்ரேலிய அணி, 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

லாஹுரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஒவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்ரேலிய அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *