
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தாங்கள் நிச்சயம் ஆதரவளிப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது பெயரைப் பார்க்கும் காலம் முடிவடைந்துள்ளதாகவும், செய்கின்ற வேலைக்கும், போட்டியிடும் நபருக்குமே வாக்கு கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
குடும்ப அரசியல் என்று கூறப்படுவது நடக்கக்கூடிய காரியமல்ல.
அத்துடன், யாருக்கு எந்த ஆதரவு தேவைப்பட்டாலும், மக்களுக்கு நியாயமான விடயங்களுக்கு தாங்கள் நிச்சயம் ஆதரவளிப்பதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.