
இலங்கை அரசுக்கு எதிராக நாட்டின் முக்கிய நகரங்களில் நேற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தலைநகர் கொழும்பில் பல பகுதிகளிலும் இரவிரவாகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களின் போராட்டங்கள் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மீரிஹான இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் போராட்ட அலை சூடுபிடிக்கத் தொடங்கியது.
அவசரகால நிலைமை பிரடகனம், ஊரடங்கு என்று அடக்குமுறைகளை அரசு ஏவியபோதும் அதனையும் மீறி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.