
´நாட்டைத் தெருவுக்குக் கொண்டுவந்த அனைத்துத் திருடர்களையும் விரட்டியடிப்போம்´ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைகழக மாணவர்கள் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரத்தைத் தடையின்றி வழங்கு, வாழ்கைச் செலவைக் குறை, மக்களை இருள் வாழ்கைக்குத் தள்ளதே, மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளாதே, பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு வழங்கு, கோத்தா வீட்டுக்குச் செல்’ போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து செங்கலடிச் சந்திக்குச் சென்று அங்கு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் பேரணியாக பல்கலைக்கழக வளாகத்தைச் சென்றடைந்தனர்.